குருவாசம் - தவறறிதல்
தவறிழைக்காத மனிதர்கள் என்று யாரையும் சொல்வதற்கில்லை. ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் ஒரே முறையில் அல்லாது மாறுபட்டே காணப்படுகின்றன. அவ்வாறு ஒருவருக்கொருவர் மாறும் பட்சத்தில் எது சரியானது முறையானது என்பதில் ஒரு அளவுகோலோ, முறையோ. நேர்த்தியோ அறுதியிட்டு கூறுவது கடினமான ஒன்று. இருந்தபோதிலும் ஒருவர் செய்யும் செயல் பிறரை பாதிக்கின்றது என்ற பட்சத்தில் அது முறையற்ற செயல் என்றோ தவறு என்றோ புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படும் செயல் ஒழுக்க நெறிக்கு உட்படாமல் தன்னையும் பிறரையும்...